×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜிஎஸ்டி வரி குறைப்பு, வட்டியில்லா கடன், வியாபாரிளுக்கு ஓய்வூதியம்; அசத்தலான பாஜகவின் தேர்தல் அறிக்கை.!

election 2019 - pjb election table - pm modi - rajnath singh

Advertisement

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் அனைத்து முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையானது வெகு நாட்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் தேர்தல் அறிக்கையை வெளிவரவில்லை. இதனால் எப்போது வெளிவரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள 75 அம்ச தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சில தேர்தல் அறிக்கைகள் விவரம் பின்வருமாறு:

ஜிஎஸ்டி வரி நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்.

சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம்.

'ராஷ்ட்ரிய வியாபார ஆயோக்' என்ற புதிய திட்டத்தின் மூலம் 60 வயதைக்கடந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம்.

நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் சட்டத்திருத்தம்.

விவசாயிகள் 5 ஆண்டுகள் வட்டி இல்லாமல் செலுத்தக் கூடிய வகையில் ஒரு லட்சம் வரையிலான வங்கிக்கடன்.

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்து ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சபரிமலை விவகாரத்தில் மதச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து அவற்றை பாதுகாப்பது.

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்.

யோகாவை உலக அளவில் கொண்டு செல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவருக்கும் வீடு, மின்சாரம், கழிப்பறை மற்றும் வங்கிக் கணக்கு ஏற்படுத்தப்படும்.

கிசான் சமான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் பாஜக தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Election 2019 #pm modi #pjp party
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story