#BREAKING: "மந்தையில் இருக்கும் ஆடா?" தவெக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!
TNEB Hard Disk Missing: மின்துறை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க் மாயமானதாக தகவல் வெளியாகியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மின்துறை அலுவலக ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்துறை தலைமை அலுவலகத்தில், டெண்டர் உட்பட முக்கிய ஆவணங்கள் அடங்கிய கணினியின் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த விஷயம் எதிர்கட்சிகளிடையே பேசுபொருளாகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக கண்டன குரல்கள் முன்வைக்கப்படுகிறது.
தூயசக்தி ஆட்சியிலா மாயம்?
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வலைப்பக்கத்தில், "மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
இதையும் படிங்க: பதவியை பறித்த எடப்பாடி பழனிச்சாமி.. வேலையை காட்டிய செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.! ஈரோட்டில் பரபரப்பு.!
சிபிஐ விசாரணை வேண்டும்:
நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும்!" என தெரிவித்துள்ளார்.