"ஐயா நீங்க இருந்தா மட்டும் போதும் எங்க வேலை ஈசியா முடிஞ்சிரும்..." எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்த துணை முதல்வர்.!!
ஐயா நீங்க இருந்தா மட்டும் போதும் எங்க வேலை ஈசியா முடிஞ்சிரும்... எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்த துணை முதல்வர்.!!
தமிழகத்தில் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முடித்துக் கொண்ட அதிமுக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாரதி ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மேலும் விரிவடைந்து செல்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மற்றும் எம்.எல்.ஏ மைத்ரேயன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். மேலும் இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதிமுக உட்கட்சி சண்டை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கவனமாக பேச வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியே நிரந்தரமாக இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அப்போது தான் எங்களது வேலை சுலபமாக இருக்கும் எனவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: "பாஜகவுக்கு நோ ; திமுக தான் மெயின் டார்கெட்.." கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!!
இது தொடர்பாக பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நிரந்தரமாக இருப்பது தான் அந்தக் கட்சி தமிழக மக்களுக்கு செய்யும் ஒரே நல்ல விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது எங்களது வேலையை சுலபமாக்கும் என தெரிவித்த அவர் இதனை அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்களா.? என தெரியாது. அப்படி நடப்பது தமிழகத்திற்கு மிகவும் நல்லது எனவும் கிண்டலடித்துள்ளார்.
இதையும் படிங்க: "நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!