×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன்.. கே.என்.நேருவுக்கு துரை வைகோ காட்டமான பதில்!

செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன்.. கே.என்.நேருவுக்கு துரை வைகோ காட்டமான பதில்!

Advertisement

திமுகவில் இணைய விரும்பியதாக தன்னைப் பற்றி கே.என்.நேரு கூறிய கருத்தை மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், தனக்கு திமுகவில் இணைய வேண்டும் என்ற அரசியல் விருப்பம் ஒருபோதும் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றி கே.என்.நேரு கூறியது கட்டுக்கதை என தெரிவித்த துரை வைகோ, கடந்த காலங்களில் திமுக குறித்து கே.என்.நேரு தன்னிடம் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளையும் முன்வைத்தார். மேலும், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து கே.என்.நேரு முன்பு தெரிவித்ததாக கூறப்படும் விமர்சனங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். இவை அனைத்தும் துரை வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் அரசியலுக்கு வந்ததே எதிர்பாராத சூழ்நிலையில் நடந்தது என்று குறிப்பிட்ட துரை வைகோ, தனது தந்தை வைகோவின் விருப்பத்திற்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: எலி வேட்டைக்கு போகமாட்டேன்.. புலி வேட்டைக்கு தான் போவேன்! நான் வீழவில்லை.. வீழ்ந்தது தீய சக்தி, ஊழல் சக்தி! மதிமுக துரை வைகோ ஆவேச பேச்சு!!!

இதுகுறித்து அவர் கூறும்போது, செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன் என்று அன்றே கூறிவிட்டேன் என தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும், வேறு சின்னத்தில் போட்டியிட்டால் திமுகவினர் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என தன்னிடம் கூறப்பட்டதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், துரை வைகோ திமுகவில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறியிருந்த நிலையில், அதற்கு துரை வைகோ மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார். இரு அரசியல் கட்சி தலைவர்களின் இந்த மாறுபட்ட கருத்துகள், திமுக–மதிமுக இடையிலான அரசியல் விமர்சனங்களை மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: கைது உண்மைதான்... ஆனால் காரணம்? ஸ்டாலின் மிசா விவகாரத்தில் துரை வைகோ பரபரப்பு கருத்து.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Durai Vaiko #dmk #MDMK #vaiko
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story