இது வேலைக்கு ஆகாது... கடுப்பில் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் மூவ்! டெல்லி ஆபரேஷனில் களத்தில் இறங்கும் கனிமொழி...! திமுக - வின் புதுவித ஆட்டம் ஆரம்பம்..!!!
திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிவைத் தொடர்ந்து, தேசிய அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்க கனிமொழி களமிறக்கப்பட்டுள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலைத் தொடர்ந்து, தேசிய அரசியலில் புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளையும் தவிர்த்து, பிராந்திய கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தவ் தாக்கரேவுடன் கனிமொழி சந்திப்பு
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மும்பை சென்ற கனிமொழி, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டாலும், தேசிய அளவில் பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான அரசியல் நிலவரமும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரூல்ஸ் போட்ட ஸ்டாலின்! துணை, இணைலாம் வேணாம்... நேராகவே கனிமொழி கேட்ட அந்த ஒரே பதவி! ஆடிப்போன அறிவாலயம்...!!!
காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோதும் அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியில் உள்ள பிராந்திய தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் பணியை கனிமொழி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் தொடங்கியுள்ள இந்த முயற்சி அடுத்தகட்டமாக வடமாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என தெரிகிறது.
அகிலேஷ், சரத்பவார் கட்சிகளுடன் பேச்சு?
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. டிம்பிள் யாதவை சந்திக்கவும் கனிமொழி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அகிலேஷ் யாதவின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை திமுக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான சுப்ரியா சுலேவுடனும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிராந்திய கட்சிகளின் ஒற்றுமையை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படும் இந்த மூன்றாம் அணி, காங்கிரஸ் மற்றும் பாஜகவைத் தாண்டி தேசிய அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2029 தேர்தலை குறிவைக்கும் புதிய வியூகம்
வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் தவெக-காங்கிரஸ் மற்றும் அதிமுக-பாஜக என இரு முக்கிய அணிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டால், தேசிய அளவிலும் அதற்கேற்ப புதிய அரசியல் கணக்கு தேவைப்படும் என திமுக கருதுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், பாஜக தரப்பில் நரேந்திர மோடியையும், காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியையும் ஏற்காத கட்சிகளை ஒன்றிணைத்து, மாற்று பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தும் முயற்சியாக இதை திமுக பார்க்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிராந்திய கட்சிகளின் ஆதரவை எந்த அளவுக்கு திரட்ட முடிகிறது என்பதே இந்த தேசிய அரசியல் வியூகம் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
இதையும் படிங்க: துணை பொறுப்பு வேண்டாம்.... தலைமைக்கே தரமான பதவி கேட்ட கனிமொழி! ஆடிப்போன ஸ்டாலின்....!!!