×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த ஒரே நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட்! மாஸ் பவரில் உதயநிதி... 20 மா.செ.க்களின் பதவி பறிபோகிறதா?... அடுத்தடுத்து அறிவாலயத்தில் நடக்கும் ரகசிய ஆலோசனை!!!

சட்டமன்றத் தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து திமுகவில் விரிவான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் ஆலோசனை குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement

சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, திமுகவில் அமைப்புரீதியான மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட அமைப்புகள் முதல் தலைமை நிர்வாகம் வரை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக உதயநிதி ஸ்டாலின் கட்சியில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மாவட்ட அமைப்புகளில் மாற்றம் குறித்து ஆலோசனை

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த சிறப்புக் குழு, சுமார் 20 மாவட்டச் செயலாளர்களின் பொறுப்புகளில் மாற்றம் செய்யவும், அவர்கள் நிர்வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைக்கவும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு, இந்த மாற்றங்கள் தொடர்பான இறுதி முடிவை திமுக தலைமை உடனடியாக எடுக்காமல் ஒத்திவைத்துள்ளதாக தகவலின்படி தெரிகிறது.

இதையும் படிங்க: BREAKING: அடுத்த பிடிவாரண்ட்.... செப்டம்பர் 2-க்குள் பொன்முடியைக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

முக்கிய முடிவுகளில் உதயநிதிக்கு அதிக பங்கு?

கட்சியை காலத்திற்கேற்ப புதுப்பித்து, முடிவெடுக்கும் செயல்முறையை மேலும் வேகப்படுத்தும் நோக்கில், உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இளைஞர்களை அதிக அளவில் கட்சிக்குள் ஈர்க்கவும், அமைப்பை வலுப்படுத்தவும் அவரது செயல்பாடுகள் உதவும் என்ற கருத்து மூத்த நிர்வாகிகள் மத்தியில் நிலவுவதாக கூறப்படுகிறது.

கைதுக்குப் பிந்தைய வரவேற்பு கவனம் ஈர்ப்பு

தஞ்சாவூரில் காவிரி உரிமைப் போராட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, அதே நாளில் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்ட உதயநிதிக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பு கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதையடுத்து, கட்சிக்குள் உருவாகியுள்ள இந்த ஆதரவு சூழலை பயன்படுத்தி, திமுக அமைப்பில் உதயநிதிக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்குவது குறித்து தலைமை பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்..! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக ரிப்போர்ட்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #திமுக #Udhayanidhi stalin #மு.க.ஸ்டாலின் #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story