எனக்கு இன்னும் டைம் இருக்கு! 2027 வரை நான் தான்... அடம் பிடிக்கும் துரைமுருகன்! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!
2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பொதுச்செயலர் பதவி மற்றும் புதிய இணை பொதுச்செயலர் பொறுப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
பொதுச்செயலர் பதவி குறித்து ஆலோசனை?
தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த அறிக்கைகளின் அடிப்படையில், கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நீண்டகாலமாக பொதுச்செயலர் பொறுப்பில் உள்ள துரைமுருகனுக்கு வயது மற்றும் உடல்நிலை காரணங்களைக் கருத்தில் கொண்டு ஓய்வளித்து, அந்த இடத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களில் ஒருவரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கவே இல்லையே! நயினார் நாகேந்திரனுக்கு புதிய பதவி...! தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி மாற்றம்..!!!
துரைமுருகனின் உறுதியான நிலைப்பாடு
ஆனால் இந்த தகவல்களைத் தொடர்ந்து, தனது பொறுப்பை விட்டுக்கொடுக்க துரைமுருகன் விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. தனது பதவிக்காலம் 2027 வரை உள்ளதாகவும், உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும் பேராசிரியர் அன்பழகன் பொதுச்செயலராகத் தொடர்ந்து செயல்பட்டதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தானும் தனது பொறுப்பை தொடர்ந்து மேற்கொள்வேன் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய உயர்பதவி உருவாகுமா?
இதற்கிடையே, கட்சியின் தினசரி நிர்வாகப் பணிகளை மேலும் சுறுசுறுப்பாக மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்று பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக வரலாற்றில் முதல் முறையாக இணை பொதுச்செயலர் என்ற புதிய உயர்பொறுப்பை உருவாக்கி, நிர்வாகம் மற்றும் அமைப்பு சார்ந்த பொறுப்புகளை மற்றொரு மூத்த தலைவரிடம் ஒப்படைக்கும் யோசனை குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கட்சியில் இளைஞர் அணிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், மூத்த தலைவர்களின் அனுபவத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. இந்த இரு தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்தி திமுகவின் அடுத்தகட்ட அமைப்பு மாற்றங்கள் எப்படி அமையும் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!