திமுக முக்கிய புள்ளியின் மனைவி காலமானார்.! கடும் சோகத்தில் திமுகவினர்.!
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், ஜெகத்ரட்சகன் துணைவியார் அனுசுயா ஜெகத்ரட்சகன் இன்று காலை காலமானார். ஜெகத்ரட்சகன், 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பிரமுகர்களின் அதிகம் ஊடகங்களில் பேசப்படுபவர் ஜெகத்ரட்சகன். இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த ஒருவார காலமாக ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா உடல்நிலை கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்துளார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அனுஷ்யா உயிரிழந்தார்.
இந்தநிலையில் அவரது உடல் அடையாறில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனின் மனைவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஜெகத்ரட்சகன் மனைவியின் உடல் இன்று மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.