×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING:திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது.! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு வழக்கில் போலீஸ் அதிரடி.!

#BREAKING:திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது.! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு வழக்கில் போலீஸ் அதிரடி.!

Advertisement

திருச்செந்தூரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஒருமையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்து சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் தோல்வியைத் தாங்க முடியல... திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ் எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

இந்த கைது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் இந்த விவகாரம் தொடர்பாக கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கூட்டத்தில் ஆற்றப்பட்ட பேச்சின் வீடியோ மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பனையூர் பாபுவால் வெடித்த புது பூகம்பம்... முதல்வர் விஜய் மற்றும் வைகோவை உடனே கைது பண்ணுங்க! அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பு.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruchendur #vijay #dmk #AnithaRadhakrishnan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story