'அசுரன் பட பாணியில் நடந்த சாதி கொடுமை'., காலில் விழ வைத்து அவமானம் படுத்திய திமுக புள்ளி!! கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
'அசுரன் பாணியில் நடந்த சாதி கொடுமை'., காலில் விழ வைத்து அவமானம் படுத்திய திமுக புள்ளி!! கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
திமுக கிளை செயலாளர் கண்ணன், பட்டியிலான பிரிவை சேர்ந்த அன்பரசன் என்பவர் பட்டாசு வெடித்ததாக கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இதில் அன்பரசன் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இடுகையிட்டுருந்தார். அதில் அவர்"-
"குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பாஜக தெற்கு ஒன்றியச் செயலாளர், பட்டியல் பிரிவைச் சேர்ந்த சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி திமுக கிளைச் செயலாளர் கண்ணன் என்பவரும் அவருடன் இருந்தவர்களும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
சமூக நீதி என்று வேஷமிட்டுத் திரியும் திமுகவின் அமைச்சர் ஒருவரின் சொந்தத் தொகுதியிலேயே, இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது.
திமுக கிளைச் செயலாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும், தலைமறைவு என்று காரணம் சொல்லிக் கொண்டு இருக்காமல், உடனடியாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சமூக நீதி என்று மேடைகளில் வெறும் உதட்டளவில் பேசிக் கொண்டு இருக்காமல், தங்கள் கட்சியினருக்கு முதலில் சமூக நீதி குறித்துக் கற்றுத் தர வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் 'சமூக நீதி பற்றி வாய்கிழிய பேசும் திமுக இதற்கான பதிலை மழுப்பாமல் கூறினால் நல்லது' என்று வசைபாடி வருகிறார்கள்.