தவெகவுக்கு வாக்களித்துவிட்டு வருந்தும் வாக்காளர்கள் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆதங்கம்.!
SS Sivasankar DMK: முன்னாள் அமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தை தாக்கி பேசினார்.
தேர்தலில் தங்களின் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகத்துக்கு அளித்தவர்கள் தற்போது வருந்துகிறார்கள் என அமைச்சர் பேசினார்.
சட்டப்பேரவையில் பேட்டி:
2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைந்த தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. தற்போது சட்டப்பேரவையில் பதவியேற்பு, அவைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இன்று திமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
தீயசக்தி:
"சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தீயசக்தி, தூயசக்தி என்று பிரச்சாரம் செய்த நபர், தற்போது தூயசக்தி என்ற தனது முகமூடியை விலக்கி வைத்துள்ளார். மக்கள் அவருக்கு வழங்கியுள்ள தீர்ப்பு என்பது தனிப்பெரும் கட்சி தானே தவிர பெரும்பான்மை ஆதரவு கொண்ட கட்சி என்பது கிடையாது. எங்களை தீயசக்தி என்று கூறி வந்தவர், எங்களது கூட்டணியை சேர்ந்தவர்களின் ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்து இருக்கிறார்.
குதிரை பேரம்:
திமுக கூட்டணியில் இருந்த கட்சியிடம் ஆதரவு கோரியபோது, பாஜக-அதிமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் ஆதரவு கோரமாட்டேன் என்று கூறினார். ஆனால், அமமுக எம்எல்ஏ காமராஜின் ஆதரவை பெற்றுள்ளார். இதுதவிர்த்து அதிமுகவில் ஒருபிரிவின் ஆதரவையும் பெற்றுள்ளார். இதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி அடைந்துள்ளார். இவர்களின் ஆதரவைப்பெற்று, தன்னை குதிரை பேரசக்தி என்பதை நிரூபணம் செய்துள்ளார்" என பேசினார்.