கொளத்தூர் இடைத்தேர்தல் பட்டியலில் பல பெயர்கள்! மேயர் பிரியாவை களமிறக்க சேகர்பாபு போடும் மாஸ்டர் பிளான்... ஆனால் திமுக தலைமை வைக்கும் ட்விஸ்ட்..!!!
கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த வி.எஸ்.பாபு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுடன் கொளத்தூருக்கும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
கொளத்தூரில் மீண்டும் போட்டியிடுவாரா ஸ்டாலின்?
கடந்த தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், அண்மைய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் மீண்டும் அங்கு போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தொகுதியில் நிலவும் அனுதாபச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுகவின் ரகசிய பிளான்...! ஒர்க் அவுட் ஆகுமா..? அறிவாலயத்தை அதிரவைக்கும் புதிய அரசியல் கணக்கு...!!!
ஆனால், இந்த முறை இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் பல பெயர்கள்
வேட்பாளர் தேர்வுக்கான பரிந்துரைப் பட்டியலில் பல முக்கியப் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சரும் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான சேகர்பாபு தரப்பில், சென்னை மேயர் பிரியாவை கொளத்தூர் தொகுதியில் களமிறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, புரசைவாக்கம் ரங்கநாதனும் இத்தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளரான சிற்றரசு, மருத்துவர் எழிலன் நாகநாதன் மற்றும் சபரீசனின் நண்பரான கார்த்திக் மோகன் ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி முடிவை எடுக்கப்போகும் கட்சித் தலைமை
மாவட்ட மறுசீரமைப்புக்குப் பிறகு கொளத்தூர் தொகுதிக்கான புதிய மாவட்டச் செயலாளர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், தொகுதியை மீண்டும் திமுக வசப்படுத்துவதற்கான பணிகளை சேகர்பாபு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், தேர்தல் பொறுப்புகளை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பது குறித்து கட்சித் தலைமை தயக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல்வேறு பெயர்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்த இறுதி முடிவை மு.க. ஸ்டாலின் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரப்பு..! அப்பாவை காணும் சர்ச்சை.... சட்டபேரவைக்குள் நுழைய திட்டம் தீட்டுகிறதா திமுக..! அதிரும் அறிவாலயம்..!!!