திமுகவின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திமுகவினர்!
Dmk ex Mp died
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான திரு மு. இராமநாதன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
மறைந்த திரு மு.ராமநாதன் அவர்கள் 70 ஆண்டு காலம் அந்த கழகத்திற்காக உழைத்தவர். இவர் கோவை மாநகர செயலாளராகவும், தணிக்கைக்குழு உறுப்பினராகவும், கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.