×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்டப்பேரவை பேச்சால் வெடித்த அரசியல் மோதல்! முதல்வர் விஜய்க்கு எதிராக களமிறங்கிய திமுக!

சட்டப்பேரவை பேச்சால் வெடித்த அரசியல் மோதல்! முதல்வர் விஜய்க்கு எதிராக களமிறங்கிய திமுக!

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திமுகவை விமர்சித்து பேசியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை (ED) ஆவணங்களைச் சுட்டிக்காட்டி அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை அறிக்கை உள்ளிட்ட விவகாரங்களை பேரவையில் முதல்வர் குறிப்பிட்டது தொடர்பாக திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது பேச்சின் சில பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... களம் இறங்க அதிரடி காட்டும் உதயநிதி! மதுராந்தகம், தாராபுரத்தில் மும்முனைப் போட்டி உறுதி.... நாளை வெளியாகும் அதிரடி அறிவிப்பு!!!

இந்த நிலையில், முதல்வர் விஜயின் பேச்சைக் கண்டித்து செப்டம்பர் 12-ஆம் தேதி அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளும், அதற்கு திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்ப்பும் தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தலில் விலகி நிற்போம் என சொல்லும் ஸ்டாலின்! முடியவே முடியாது என மறுத்த உதயநிதி..... அறிவாலயத்தில் தொடரும் அதிரடி ஆலோசனை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #TVK #DMK Protest #Assembly #vijay #stalin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story