'துரோகி'.. காங்கிரசருடன் காரசாரமாக மல்லுக்கட்டிய திமுகவினர்.. சென்னையில் பரபரப்பு.!
காயிதே மில்லத்துக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில் திமுக Vs காங்கிரஸ் தொண்டர்கள் வாதம் செய்துகொண்டனர்.
தேர்தல் வெற்றிக்கு நன்றி சொல்ல கூட வரவில்லை, இங்கு எங்கு வந்தாய்? என கே.செல்வப்பெருந்தகையை நோக்கி திமுகவினர் கேள்விகளை முன்வைத்தனர்.
முதல்வர் மரியாதை:
கண்ணியமிகு காயிதே மில்லத்தின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், இன்று திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மசூதியில் இருக்கும் காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் & திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திமுக தொண்டர்களும் இருந்தனர்.
இதையும் படிங்க: Madurai News: அலங்காநல்லூரில் அட்டூழியம் காட்டிய தெருநாய்கள்.. 15 பேர் அலறி மருத்துவமனைக்கு ஓட்டம்.. செவிலியர்கள் சொன்ன ஷாக் தகவல்.!
ஸ்டாலின் வருகிறார்:
இதனிடையே, முதல்வர் வந்து சென்றதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வந்தார். அவர் மரியாதை செய்யச் சென்றபோது, மு.க. ஸ்டாலின் வருவதாக திமுக தொண்டர்கள் கூறி இருக்கின்றனர். இதனால் தான் காத்திருப்பதாக கூறி ஜி.கே. வாசன் இருந்தார். இதற்குள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. செல்வப்பெருந்தகை காயிதே மில்லத்துக்கு மரியாதை செய்ய வந்தார்.
காங்கிரஸ் Vs திமுக:
அப்போது, அங்கிருந்த திமுக தொண்டர்கள் காங்கிரசை நோக்கி துரோகி என்ற வார்த்தையுடன் வாதம் செய்ய பாய்ந்தனர். மேலும், மு.க. ஸ்டாலின் வருவதாக தெரிவித்தும், அதனை கண்டுகொள்ளாமல் தொண்டர்கள் புடைசூழ செல்வப்பெருந்தகை காயிதே மில்லத்துக்கு மரியாதை செய்து வந்தார். வெளியே வரும்போது காங்கிரஸ் தொண்டர்கள் Vs திமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் உண்டாகியது.
பரபரப்பு:
ஒருகட்டத்தில் இருதரப்பும் அவதூறான வார்த்தையை பேசி திட்டிக்கொண்டது. ஸ்டாலின் வரும்போது காங்கிரஸ் தலைவர் இருக்கக்கூடாது என வாதம் செய்து, யார் நீ? எங்கிருந்து வந்தாய் துரோகி, நன்றி செலுத்த கூட வரவில்லை என கூறியபடி திமுகவினர் பிரச்சனை செய்தனர். ஒருசிலரின் சட்டையை பிடித்தும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
கே. செல்வப்பெருந்தகை பேட்டி:
தாக்குதல் முயற்சி சம்பவம்:
இதையும் படிங்க: #BREAKING: பட்டு வேஷ்டி சட்டையில் தலைமை செயலகம் வந்த முதல்வர் விஜய்.. முதல் முறையாக.. இன்ப அதிர்ச்சியில் தவெகவினர் துள்ளல் கொண்டாட்டம்.!