அதிருப்தியில் EPS! திமுகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளி...! அதிமுகவை அடிமேல் அடிக்கும் திமுக! செம குஷியில் ஸ்டாலின்.!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் இணைவாரா என்பது குறித்து செங்கோட்டையனின் நிலைப்பாடு அதிமுக–திமுக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் சூழல் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்து வருகிறது. கூட்டணிகள், கட்சி மாற்றங்கள், தலைவர்களின் திடீர் முடிவுகள் போன்றவை மாநில அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில் அரசியல் வட்டாரங்கள் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றன.
கட்சிச் சேர்க்கை நிகழ்வுகளில் திமுக முன்னிலை
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையடுத்து அனைத்து கட்சிகளிலும் கட்சிமாற்று பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. பல தொகுதிகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள் தலைமையில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திமுக முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இபிஎஸ் அதிருப்தி! செங்கோட்டையன் அடுத்து எடுக்கப்போகும் அரசியல் முடிவு? திடீர் பரபரப்பு...!!!
அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்த அதிர்ச்சி
முக்கியமாக அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருவது, இபிஎஸ்க்கு அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டோர்கள், அதிருப்தியடைந்தோர்கள் என பலர் திமுகவில் இணைந்துள்ளனர்.
செங்கோட்டையனை இணைக்க முயலும் திமுக
இந்த தொடர்ச்சியான சேர்க்கை பணியை திமுக சார்பில் செந்தில் பாலாஜி ஒருங்கிணைத்து வருகிறார். அடுத்து அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனை திமுகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையன் முடிவு என்ன?
எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எதிர்த்த திமுகவில் இணையுவாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. செங்கோட்டையன் திமுகவுக்கு வருவதாக சிலர் கூறினாலும், அதிமுகவில் ஒன்றிணைவதற்கான வாய்ப்பாக அவர் இதை பயன்படுத்தலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசியல் செஸ் விளையாட்டில் முக்கிய கட்டம்
திமுகவின் நிலைப்பாடு தெளிவாக செங்கோட்டையன் விரைவில் இணைவார் எனக் கூறும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தேர்தல் நெருங்கும் இந்த காலத்தில் செங்கோட்டையனின் நிலைப்பாடு 2026 தேர்தலின் அரசியல் கணக்கை மாற்றும் திறன் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்நிலையில், செங்கோட்டையன் எப்படியொரு முடிவை எடுக்கிறார் என்பது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான விசயமாக மாறியிருக்கிறது.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! நேற்றுவரை OPS உடன்..... இன்று திடீரென விலகி திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி! சூடு பிடிக்கும் அரசியல் களம்!