BREAKING: தாராபுரத்தில் 7 சுற்றுகளில் தவெக முதலிடம்! அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக... கெத்து காட்டும் CM விஜய்..!!!
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 7 சுற்றுகள் முடிவில் தவெக 18,690 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக, திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் மற்றும் முழு நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆரம்பச் சுற்றுகளில் கடும் போட்டியைச் சந்தித்த தவெக, 5-வது சுற்றில் முதலிடத்தைப் பிடித்தது. தொடர்ந்து 6 மற்றும் 7-வது சுற்றுகளிலும் தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளது.
7 சுற்றுகள் முடிவில் தவெக முதலிடம்
7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தமிழக வெற்றிக் கழகம் 18,690 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக 17,773 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், திமுக 15,988 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: BREAKING: திடீர் ட்விஸ்ட்... தாராபுரம் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி! பரபரப்பில் அரசியல் களம்..!!!
அதிமுகவை விட 917 வாக்குகள் முன்னிலை
தற்போதைய நிலவரப்படி, அதிமுகவை விட தவெக 917 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. திமுகவும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளதால், அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மற்ற கட்சிகள் பெற்ற வாக்குகள்
நாம் தமிழர் கட்சி 1,364 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 363 வாக்குகளையும் பெற்றுள்ளன. 7 சுற்றுகளின் முடிவில் தவெக முன்னிலையில் இருந்தாலும், இறுதி முடிவைத் தெரிந்துகொள்ள எஞ்சிய வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: உங்க ஆட்டத்தை அடக்குறேன்...! ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு... முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! பரபரப்பில் அரசியல் களம்..!!!