×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேவாலயம் முன்பு திமுக - தவெக நேருக்கு நேர் நின்று வாக்கு சேகரிப்பு! தொண்டர்களின் முழக்கத்தால் சற்று பரபரப்பு...!!!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக, தவெகவினர் ஒரே தேவாலயம் முன்பு நேருக்கு நேர் வாக்கு சேகரித்தனர். தொண்டர்களின் முழக்கத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒரே இடத்தில் நேருக்கு நேர் நின்று வாக்கு சேகரித்தனர். தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. எல்லிஸ் நினைவாலய கிறிஸ்தவ ஆலயம் முன்பு இந்த காட்சியை காண முடிந்தது.

தேவாலயம் முன்பு நேருக்கு நேர் பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை முடிந்து வெளியே வரும் மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக திமுகவினர் ஆலயத்தின் ஒரு பகுதியில் காத்திருந்தனர். திமுக தேர்தல் தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.

இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணி...! நடிகரிடம் ஆட்சியைக் கொடுத்தா இப்படித்தான் நடக்கும்! தாராபுரம் பிரச்சாரத்தில் ஆ.ராசா அதிரடிப் பேச்சு... சூடான இடைத்தேர்தல் களம்..!!!

அதே நேரத்தில், ஆலயத்தின் மறுபுறம் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், பர்வேஸ் உள்ளிட்டோர் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் எதிரெதிரே நின்றபோதும், நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து நலம் விசாரித்துக் கொண்டனர்.

தொண்டர்களின் முழக்கத்தால் சிறிது நேரம் பரபரப்பு

இதனிடையே, இரு கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சியின் பெயர்களை முழக்கமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேவாலய நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தொண்டர்கள் அமைதியடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் தனித்தனியாகப் பிரித்து நிற்க வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு

பின்னர் தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்கு சேகரித்தனர். தவெகவினர் விசில் சின்னத்துக்கும், திமுகவினர் உதயசூரியன் சின்னத்துக்கும் ஆதரவு கோரி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் சுகன்யாவும், தவெக சார்பில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர்.

அப்போது செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதை போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு குறுக்கிட்ட கே.என்.நேரு, செய்தியாளர்கள் தங்கள் பணியைச் செய்வதாகவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுமாறும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். ஒரே இடத்தில் எதிரெதிரே நின்று இரு கட்சியினரும் வாக்கு சேகரித்த காட்சி, தாராபுரம் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெகவின் வெற்றி கஷ்டம் தான்...! வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர்.. பின்னணியில் யார்? வெளிவந்த அதிருப்தி அரசியல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தாராபுரம் இடைத்தேர்தல் #dmk #TVK #வாக்கு சேகரிப்பு #CSI Ellis Memorial Church
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story