2031 இல் இல்ல... 2027 லிலே களமிரங்கும் தனுஷ்..! 234 தொகுதிகளுக்கும் போடும் வலைவீச்சு... மகளிர் அணிக்கு கொடுத்த முக்கிய அசைன்மென்ட்..!!!
அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நடிகர் தனுஷ், தனது நற்பணி இயக்கத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதுவரை அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாத அவர், தனது ரசிகர் மன்றத்தை 'தனுஷ் நற்பணி இயக்கம்' என மாற்றி மாநிலம் முழுவதும் அமைப்பை வலுப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 14-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தப் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து இயக்கத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்தி நாளிதழில் வெளியாகியுள்ளது .
இதையும் படிங்க: அரசியல் பிரவேசத்திற்கு தயாராகும் தனுஷ் நற்பணி இயக்கம் ? 3,000 சட்ட ஆலோசர்கள் நியமிப்பு... தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!!!
மகளிர் அணியை வலுப்படுத்த தனுஷ் ஆலோசனை
அக்டோபர் 25-ம் தேதி சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் ஆலோசனை நடத்தியதாக இயக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இயக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதுவரை கிளைகள் தொடங்கப்படாத பகுதிகளில் புதிய அமைப்புகளை உருவாக்கி அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மகளிர் அணியை வலுப்படுத்தவும், பெண் ஆதரவாளர்களை அதிக அளவில் இயக்கத்தில் இணைக்கவும் தொகுதி வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2027 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆலோசனை?
2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்காமல், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்தும் இயக்கத்தினர் ஆலோசித்து வருவதாக தனுஷுக்கு நெருக்கமான வட்டாரங்கள் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்துள்ளன.
உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் இயக்கத்தை வலுவாகக் கட்டமைப்பதுடன், நேரடியாக கள நிலவரத்தை அறிந்துகொள்ளவும் முடியும் என நிர்வாகிகள் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக-வில் இணையும் தனுஷ்...? வெள்ளி விளக்கில் இருந்த அந்த ஒரு குறியீடு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!