அடப்பாவி..! பாஜக பெண் கவுன்சிலர் குடும்பத்தினருக்கு உணவில் மயக்க மருந்து கலந்த கொடுத்த சமையல்காரர்..! அடுத்த சில நிமிடங்களில் நடந்த அதிர்ச்சி! நடுங்கவைக்கும் CCTV வீடியோ..!!!
டெக்ராடூனில் பாஜக கவுன்சிலர் அமிதா சிங் குடும்பத்தினருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டெக்ராடூனில் பாஜக கவுன்சிலர் அமிதா சிங் வீட்டில் பரபரப்பான கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் வேலைக்கு இருந்ததாக கூறப்படும் நபர், குடும்பத்தினரின் உணவில் மயக்க மருந்து கலந்ததாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் மயங்கிய நிலையில் இருந்தபோது வீட்டில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு அவர் தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உணவில் மயக்க மருந்து கலந்ததாக புகார்
டெக்ராடூனின் பல்ளிவாலா சவுக் அருகே நாத் வாட்டிகா பகுதியில் அமிதா சிங் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தகவலின்படி, சில வாரங்களுக்கு முன்புதான் வீட்டுப் பணிக்காக நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினர் சாப்பிட்ட உணவில் அவர் மயக்கப் பொருளை கலந்ததாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உணவை சாப்பிட்ட பின்னர் குடும்பத்தினரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 5 முனைப் போட்டியால் அனல் பறக்கும் பிரச்சாரம்! மொத்தமா மாறப்போகுது தவெக பிளான்... ஆளுங்கட்சிக்கு காத்திருக்கும் பெரும் சவால்..!!!
மருத்துவமனையில் கவுன்சிலர்
மயக்க நிலையில் இருந்த அமிதா சிங், அவரது கணவர் மகிபால் சிங் மற்றும் மகன் சுபம் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அமிதா சிங் டெக்ராடூனில் உள்ள சினர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கணவர் மற்றும் மகனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடைக்கும் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தப்பியோடியதாக கூறப்படும் வீட்டுப் பணியாளரை பிடிக்க தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா, வீட்டில் பணிக்கு சேர்க்கப்பட்ட நபரின் பின்னணி சரிபார்க்கப்பட்டதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பிற பொருட்களின் மதிப்பு குறித்த முழுமையான விவரங்கள் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்ட பிறகு, உணவில் கலக்கப்பட்டதாக கூறப்படும் பொருள் மற்றும் கொள்ளை தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றி செல்லும்..! சற்றுமுன்.. உயர்நீதி மன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!!