×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரிசார்ட்டில் நடந்த ரகசிய பேச்சு! என் புள்ளை மேல சத்தியம் பண்ணி நான் சொல்றேன்.... எமோஷனல் சவால் விடுத்த சி.வி. சண்முகம்!!!

புதுச்சேரி ரிசார்ட்டில் நடந்ததாக கூறிய ரகசிய பேச்சுவார்த்தையை சி.வி.சண்முகம் வெளிப்படுத்தியதால் அதிமுக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

அதிமுக உள்கட்சிப் பிரச்சனை மீண்டும் தீவிரமான நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்தபோது நடந்ததாக கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தையை அவர் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்பாக கூறிய தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளன.

ரிசார்ட்டில் நடந்ததாக கூறிய ரகசிய பேச்சு

தகவலின்படி, அந்த சந்திப்பின் போது “நான் மேல பேசிட்டேன். திமுக ஆதரவோட என் தலைமையில ஆட்சி அமையப்போகுது. நீங்க எல்லாரும் அமைச்சராகலாம். பாஜகவும் நம்ம கூட சேர்ந்துக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பேச்சு தற்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எமோஷனல் சவால் விடுத்த சி.வி.சண்முகம்

இதற்கிடையில், தனது குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில் சி.வி.சண்முகம் உணர்ச்சிபூர்வமான சவாலையும் முன்வைத்தார். “என் புள்ளையையும் உங்க புள்ளையையும் இங்க நிறுத்துங்க. என் புள்ளை தலையில அடிச்சு சத்தியம் பண்ணுறேன். திமுகவோட கூட்டணி வைக்கலாம்னு நீங்கதான் சொன்னீங்க. அதே மாதிரி உங்க புள்ளை தலையில கை வச்சு உங்களால சத்தியம் பண்ண முடியுமா?” என்று எடப்பாடி பழனிசாமியை நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: தேமுதிகவின் தேர்தல் தந்திரம்! பிரேமலதா முடிவால் அரசியல் களத்தில் புதிய பரபரப்பு!

அதிமுகவில் அதிகரிக்கும் உள்கட்சி மோதல்

இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் வெளிப்படையாக தெரிகிறது. கட்சியின் முக்கிய தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு தீவிரமடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக திமுக கூட்டணி குறித்த குற்றச்சாட்டு, எதிர்கால அரசியல் நகர்வுகளில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

 

இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சி.வி.சண்முகம் #Edappadi Palaniswami #அதிமுக #Dmk alliance #Puducherry Resort
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story