×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிவி சண்முகம் தவெக-வில் இணைய தாமதம் ஆக இதுதான் காரணமா? CM விஜய் காட்டும் தயக்கம்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!

அதிமுகவில் அதிருப்தி நிலவும் சூழலில், சி.வி. சண்முகத்தின் தவெக இணைவு ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியலில் கட்சி மாறுதல்கள் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெளியேறிய நிலையில், சி.வி. சண்முகம் தவெகவில் எப்போது இணையப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இணைவு தாமதத்திற்கு பதவி விவகாரமா?

அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி சூழலில் சி.வி. சண்முகம், தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணையாததற்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் சி.விஜயபாஸ்கர்! அப்போ தவெக இல்லையா... இப்போ திமுகவா! அரசியலில் வெடிக்கப்போகும் பெரிய பூகம்பம்...!!!

தவெக தலைமையின் தயக்கம்

தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைந்த தலைவர்களை கட்சியினர் வரவேற்ற நிலையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாக முக்கிய நிர்வாகிகள் வருவது குறித்து கட்சியின் சில நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தவெகவில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகளின் மனநிலையையும் கருத்தில் கொண்டு, புதியவர்களுக்கு உயர்பதவி வழங்கும் விவகாரத்தில் கட்சித் தலைமை கவனமாக அணுகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் சூழலும் மற்றொரு காரணம்

இதற்கிடையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் இணைவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிய இணைவுகளை தற்காலிகமாக ஒத்திவைக்கும் நிலைப்பாட்டை தவெக தலைமை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாடு மற்றும் மாவட்ட அளவிலான அரசியல் சூழல் காரணமாக, தனது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என சி.வி. சண்முகம் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #சி.வி. சண்முகம் #AIADMK #தமிழக அரசியல் #Political news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story