×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன இப்படி சொல்லிட்டாரே... எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சி. வி. சண்முகம்! பின்னணியில் இருக்கும் 'ஸ்கெட்ச்'.. அதிரும் அரசியல் களம்!!!

அதிமுகவில் தொடர்வதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் திடீர் கருத்து தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த பதில், கட்சியின் உள்நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை

அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவதா அல்லது மாற்றுக் கட்சியில் இணையலாமா என்பது குறித்து சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த சம்பவமா.... சேகர் பாபுவுடன் ரகசிய மீட்டிங் போட்ட முக்கிய புள்ளி...! செம ஷாக்கில் எடப்பாடி..!!!

செய்தியாளர்களிடம் அதிரடி பதில்

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியே வந்த சி.வி. சண்முகத்திடம், “நீங்கள் இன்னும் அதிமுகவில் இருக்கிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் அதிமுகவில் இருக்கிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியாது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறிவிட்டு, மேலும் எந்த விளக்கமும் அளிக்காமல் தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு

சி.வி. சண்முகத்தின் இந்த கருத்து, அதிமுக தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவரது அடுத்தகட்ட அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், அதிமுகவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மௌனம் சம்மதம்மா... மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி? எடப்பாடி போட்ட கணக்கு அப்போ சரிதானா... அரசியல் களத்தில் புதிய விவாதம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cv Shanmugam #AIADMK #Edappadi Palaniswami #தமிழக அரசியல் #Political news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story