×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING : ஒரே நாளில் முடிந்த தேர்வு... அடுத்த நாளே 54 பேரும் அரசு பனியில்! எஸ்.பி.வேலுமணி ஆட்சியில் நடந்த மெகா ட்விஸ்ட் அம்பலம்... சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!!!

கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

Advertisement

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தார்மீக ஆதரவோடு கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முன் விசாரணையின் போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமன நடைமுறைகள் தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் முடிந்த தேர்வு நடைமுறை

2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 69 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 440 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதே நாளிலேயே தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டு, மறுநாளே அவர்கள் பணியில் சேர்ந்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!! மகிழ்ச்சியில் மாணவர்கள்...!!!

விளம்பரம் தொடர்பாக எழுந்த கேள்வி

இந்த நியமனங்களை எதிர்த்து கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக உள்ள ஈஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையின் போது, வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட நாளிதழின் அச்சுப் பதிப்பில் அந்த விளம்பரம் இல்லை என்றும், இ-பேப்பரில் மட்டும் இடம்பெற்றிருந்ததாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத்தின் கருத்து

440 பேரின் சான்றிதழ்களை ஒரே நாளில் சரிபார்த்து, மதிப்பீடு செய்து, தேர்வுப் பட்டியலைத் தயாரித்து, ஆணையரின் ஒப்புதலுடன் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட விதம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கோவை மாநகராட்சி விதிகளின்படி பதவி உயர்வு ஒதுக்கீடு தொடர்பான அம்சங்களையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, மனுதாரருக்கு இந்த நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடர உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

இதையும் படிங்க: அவரை அந்த பொறுப்பில் இருந்து தூக்குங்க.... ஸ்டாலினிடம் துர்கா அம்மையார் போட்ட கறார் கண்டிஷன்! பரபரப்பில் தமிழக அரசியல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore Corporation #High court #Junior Assistant Recruitment #sp velumani #Recruitment Irregularities
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story