காலையிலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!!!
பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்காமல் மக்கள் நலப்பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும் இடைத்தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சில அமைச்சர்களின் பேட்டிகள் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் அனைவரும் இனிவரும் நாட்களில் கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குஷியோ குஷி! அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை..... வெளியாகும் அதிரடி அறிவிப்பு!
சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கட்டுப்பாடு
அண்மையில் அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத் மற்றும் தமிழன் பார்த்திபன் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன. இதையடுத்து, அமைச்சர்கள் தேவையற்ற சமுதாய நிகழ்ச்சிகள் மற்றும் பொதுவெளி நிகழ்வுகளில் பங்கேற்பதை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள் அல்லது நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மக்கள் நலப்பணிகளில் முழு கவனம்
அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல், தங்களது துறைகளில் நடைபெற்று வரும் மக்கள் நலப்பணிகள் மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணம் உருவாகும் வகையில் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், புதிய சர்ச்சைகளில் சிக்காமல் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING : டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விலையில்.... முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...!!!