×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!

177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!

Advertisement

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பள்ளி அங்கீகாரம், தர உயர்வு உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அன்பில் மகேஷுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் CCB போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவரது வீடு மற்றும் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எலி வேட்டைக்கு போகமாட்டேன்.. புலி வேட்டைக்கு தான் போவேன்! நான் வீழவில்லை.. வீழ்ந்தது தீய சக்தி, ஊழல் சக்தி! மதிமுக துரை வைகோ ஆவேச பேச்சு!!!

சோதனையின்போது அரசு தொடர்பான ஆவணங்கள், நிதிப் பதிவுகள், செல்போன்கள், கணினிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக CCB போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக CCB போலீசார் தெரிவித்துள்ளனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஆய்வு செய்த பின்னர், வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING : சற்று முன்... மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.... பெரும் பரபரப்பு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anbil mahesh #dmk #Private school permission #school #Education Minister #CCB police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story