#BREAKING : சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. 5 முனைப் போட்டி.. சிபிஐ, சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!
#BREAKING : சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. 5 முனைப் போட்டி.. சிபிஐ, சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் நடைபெற உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தற்போது 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
தாராபுரம் தொகுதியில், தி.மு.க. சார்பில் எஸ். சுகன்யா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கே. பானுமதி களமிறக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பி. சத்தியபாமாவும், நாம் தமிழர் கட்சி சார்பில் மு. கார்த்திகாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார். இதன் மூலம் தாராபுரம் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சிபிஐ என 5 தரப்பினர் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.
அதேபோல், மதுராந்தகம் தொகுதியில், தி.மு.க. சார்பில் இ. பரந்தாமன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கே. மரகதம் குமரவேல்வும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோ. ஜானகிராமன்வும் களத்தில் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் பி. சுகந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் மதுராந்தகம் தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சிபிஎம் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: நீங்க என்ன சொல்றது... கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
இரு தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியாக களம் கண்டுள்ளன. தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணனும், மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் பி. சுகந்தியும் போட்டியிடுகின்றனர்.
முக்கிய கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்வதுடன், எதிரணியின் வாக்குகளைப் பிரிக்கும் வகையிலும் தேர்தல் வியூகங்களை வகுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... தவெக -வுக்கு ஆப்பு வைத்த கம்யூனிஸ்ட் கட்சி..! இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!!