எவன் எவனோ 2 பொண்டாட்டி வச்சு இருக்கும்போது.... காசு இருந்தா 10 கூட வச்சுக்கலாம்! விஜய்யை ஆதரித்த ரசிகை.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண பதலடி.... வைரலாகும் சர்ச்சை வீடியோ!!!
நடிகர் விஜய் குடும்ப விவகாரம் தொடர்பாக ரசிகை கூறிய சர்ச்சை கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கடும் விமர்சனம். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் வருகை குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனைச் சுற்றி விஜய் சர்ச்சை தொடர்பான கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
ரசிகையின் சர்ச்சையான கருத்து
இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறிய ஒரு பெண் ரசிகை அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர், “குப்பை பொறுக்குபவனே இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கிறான், காசு இருக்கிறவன் 10 பொண்டாட்டி கூட வைத்துக் கொள்வான், அதில் உங்களுக்கு என்ன?” என்று மிகவும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், சங்கீதா தேர்தல் நேரத்தில் விவாகரத்து கோருவது அரசியல் சதி என்றும், அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து கொண்டு விஜய்க்கு எதிராக செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
ப்ளூ சட்டை மாறனின் கடும் விமர்சனம்
இந்த பேச்சை குறிப்பிட்டு பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “தவெக-வின் மகளிர் ஆர்மி பேச்சுகள் அனைத்தும் அட்டகாசம்.. இது வேற லெவல்.. வெளங்குமடா தமிழ்நாடு” என்று அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் கண்டனம்
ஒரு பெண் மற்றொரு பெண்ணின் உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் பலதார மணத்தை நியாயப்படுத்தி பேசியதாகக் கூறப்படும் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை பெண்களின் உரிமைகளை இழிவுபடுத்தும் கருத்தாக விமர்சித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகையை ஒரு பகுதி மக்கள் வரவேற்றாலும், அவரது ரசிகர்களிடமிருந்து வெளிவரும் இத்தகைய கருத்துக்கள் அவரது கட்சியின் படிமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பெண்களின் உரிமைகள் குறித்து பேசும் ஒரு அரசியல் தலைவராக இருக்கும் நிலையில், இத்தகைய கருத்துக்களை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! குழந்தைகள் கண்முன்னே விஜய் சங்கீதாவிடம் அப்படி தான் நடந்துக்குவார்! விஜய் குறித்து சுசித்ராவின் குற்றச்சாட்டு!!!