×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Lok Sabha 2014: பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு எம்.பி சீட்.!! சர்ச்சையில் பாஜக.!!

Lok Sabha 2014: பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு எம்.பி சீட்.!! சர்ச்சையில் பாஜக.!!

Advertisement

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் களம் கலைக் கிட்ட தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் பொது தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகியவற்றிற்கு இடையே பெரும்பான்மையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கடந்த பொது தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன ஆனால் இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் பாலியல் சீண்டல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் வேட்பாளரான பாலகணபதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பாவிடம் பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த பால கணபதி மீது சசிகலா புஷ்பாவின் கணவர் வழக்கு பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #Sexual Scandal #ex mp #sasikala pushpa #Pon Balaganapathy #Politiucs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story