#சற்றுமுன் : அண்ணாமலையின் புதிய கட்சியில் இணையும் முக்கிய புள்ளி....! பாஜக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு...!!!
தமிழக பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவரும், பொள்ளாச்சி முன்னாள் வேட்பாளருமான கே.வசந்தராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கத்தில் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவுக்கு கோவை மாவட்டத்தில் முக்கிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கட்சியின் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவரும், 2024 மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவருமான கே.வசந்தராஜன், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், கே.அண்ணாமலை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படும் புதிய அரசியல் இயக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக மீது அதிருப்தி
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து வசந்தராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றக்கூடிய அரசியல் சூழல் தற்போது கட்சிக்குள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து நீண்டகாலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளே தனது முடிவுக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலைக்கு வெளிப்படையான ஆதரவு
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் பாதையை நோக்கி நகர்கிறார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அவரது தீவிர ஆதரவாளராக அறியப்படும் வசந்தராஜன், அண்ணாமலையின் புதிய முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தான் மட்டுமின்றி தனது ஆதரவாளர்களும் அந்த இயக்கத்தில் இணைய உள்ளதாக அவர் அறிவித்திருப்பது, கோவை மற்றும் மேற்கு மண்டல பாஜக நிர்வாகிகளிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு கவனம் பெற்ற வசந்தராஜனின் இந்த முடிவு, தமிழக அரசியல் களத்தில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பாஜகவில் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் அடுத்ததாக எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால், அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதையும், அவருடன் மேலும் யார் யார் இணையக்கூடும் என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் சி.விஜயபாஸ்கர்! அப்போ தவெக இல்லையா... இப்போ திமுகவா! அரசியலில் வெடிக்கப்போகும் பெரிய பூகம்பம்...!!!