மீண்டும் ஆடியோ குண்டை போட்ட அண்ணாமலை! கையில் இருக்கும் அந்த புதிய வீடியோ? தமிழக அரசியலில் பரபரப்பு!!!
தவெக அமைச்சர்கள் கமிஷன், லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் மீண்டும் ‘ஆடியோ அரசியல்’ பேசுபொருளாகியுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, எழும்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் கமிஷன், லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கையில் எடுத்த ஆடியோ அரசியல்
ஒருகட்டத்தில் தனது புயல்வேக பிரசாரங்களால் தமிழக அரசியலில் கவனம் பெற்ற அண்ணாமலை, சமீபகாலமாக வேறுபட்ட அரசியல் அணுகுமுறையை கையாண்டு வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் தனக்குப் பரிச்சயமான ஆடியோ அரசியல் பாணியை கையில் எடுத்திருப்பது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிடிஆர் ஆடியோ முதல் 2G விவகாரம் வரை
கடந்த 2023-ம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்பட்ட ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதம் ஏற்பட்டது. பின்னர் 2024-ல் 2G விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்பையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தவெக அமைச்சர்கள் குறித்து புதிய பரபரப்பு
இந்த வரிசையில், தற்போது தவெக அமைச்சர்கள் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அண்ணாமலை. எழும்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர்கள் கமிஷன் மற்றும் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த ஆடியோவை அவர் வெளியிடுவாரா, அதில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் தகவல்கள் என்ன என்பது குறித்து அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தவெக தரப்பில் இருந்து வரும் பதில் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... திடீர் ட்விஸ்ட்! ஆதரிக்காமல் விலகிய பிரேமலதா..! புதிய அரசியல் கணக்குகளுக்கு அச்சாரமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!!!