திடீர் ட்விஸ்ட்.! அதிமுகவில் அண்ணாமலை... . யாரும் எதிர்பார்க்காத புதிய திருப்பம்! அதிரும் அரசியல் மாற்றம்!!!
அண்ணாமலையை அதிமுகவில் இணைக்க சில மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையில் அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், அண்ணாமலை தொடர்பான தகவல் ஒன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில் அவரை கட்சிக்குள் அழைத்து வர வேண்டும் என சில மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரகசிய ஆலோசனை நடந்ததாக தகவல்
திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தனது அமைப்பை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது 'We the Leaders' அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் அண்ணாமலையை அதிமுகவில் இணைப்பது குறித்து சில மாவட்ட செயலாளர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!
அண்ணாமலையின் அடுத்த முடிவு என்ன?
தொடர்ச்சியான தேர்தல் பின்னடைவுகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு, தீவிரமாக செயல்படும் தலைவரின் வருகை புதிய உத்வேகத்தை அளிக்கக்கூடும் என்று ஒரு தரப்பு கருதுகிறது. மறுபுறம், தனித்த அரசியல் பாதையை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் அண்ணாமலை தனது திட்டத்தில் உறுதியாக இருப்பார் என்ற கருத்தும் நிலவுகிறது.
அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு
இதனால், அதிமுக தரப்பில் இருந்து வரும் என கூறப்படும் இந்த அழைப்பை அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா அல்லது தனது புதிய அரசியல் பயணத்திலேயே கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த தகவல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: அப்பாவை காணோம்.... ஆவேசத்தில் கொதித்தெழுந்த திமுக..! திருச்சியில் ஸ்டாலின் எடுக்கும் விஸ்வரூபம்?.. கசிந்த ரகசிய தகவல்.!!!