×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்பேத்கர் சிலைக்கு, திமுக பொன்முடி செருப்பு மாலை.?! - சர்ச்சை பேச்சு.!

அம்பேத்கர் சிலைக்கு, திமுக பொன்முடி செருப்பு மாலை.?! - சர்ச்சை பேச்சு.!

Advertisement

கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஏற்படும் ஜாதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்று, வேலைவாய்ப்பில் முன்னேறி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என கூறினார். இந்த எண்ணமே ஜெகன் மூர்த்தியின் எண்ணத்துடனும் ஒன்றுபடுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் சமூகங்களைப் பிரித்து வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இரு சமுதாயங்களையும் ஓட்டுக்காக அரசியல் சூழ்ச்சி செய்து சண்டை மூட்டி விட்டு பிரித்து வைப்பது திமுகவின் மோசடி. கடந்த வரலாற்றை திருப்பி பாருங்கள்.

இதையும் படிங்க: திமுக வை கடுமையாக தண்டிக்கனும்! எந்த தொகுதியிலும் வெற்றி பெற கூடாது! இதுதான் எங்களது நோக்கம்! திமுகவுக்கு இந்த தேர்தல்ல பொங்கல் வைக்கணும்! ஹெச்.ராஜாவின் அதிரடி பேச்சு!

 தேர்தல் நேரம் பார்த்து அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடுவார்கள். அதை பாமகவினர் செய்ததாக கலவரத்தை உருவாக்கி நம்ப வைப்பார்கள். திண்டிவனம் தொகுதியில் பொன்முடி அப்படித்தான் செய்தார். தேர்தலுக்கு முன் கலவரம் ஏற்பட்டது. இது போன்ற கலவரங்கள் எல்லாம் திமுகவுக்கு கைவந்த கலை.

பட்டியலின மக்களும் வன்னிய சமூகத்தினரும் ஒன்றிணைந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறி, ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்றும், மாற்றத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: "என்னை போன்றவர் தான் திருமாவளவனும்.." ஓபனாக பேசிய அன்புமணி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ponmudi #dmk #Anbumani #ambethkar #kvkuppam #anbumani ramadoss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story