×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும்! புதிய வியூகம் அமைக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா

amit shaa talks how to get more places in tamilnadu

Advertisement

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பது பாஜாகவின் தீராத கனவாக உள்ளது. இதனை முறியடித்தே தீர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி எதிரணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இது வரை ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்காத பாஜகவிற்கு  தமிழகத்தில் எப்படியும் அதிகபடியான இடங்களில் வென்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அப்படி நடந்துவிட்டால் வட இந்தியாவை போன்றே தென் இந்தியாவையும் தன் பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணுகிறது பாஜக.

ஆனால் தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தனியாக நின்று பாஜாகாவால் எதையும் சாதிக்க முடியாது. கண்டிப்பாக வலுவான கூட்டணியுடன் தமிழகத்தில் நுழைய வேண்டும். ஆனால் பாஜாகாவுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் கண்டிப்பாக தனது கட்சியின் செல்வாக்கு குறைந்து விடும் என்று அணைத்து கட்சிகளுக்கும் ஒருவித பயம் இருக்கும்.

இத்தகைய சூழல் நிகழும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 

மத்தியில் ஆளும், பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், டில்லியில் நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமித் ஷா பேசியது குறித்து, மத்திய ராணுவ அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தற்போது பாஜக ஆளும் 19  மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்தெந்த மாநிலங்களில், இரண்டாவது இடத்தில் கட்சி உள்ளதோ, அங்கு, ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கர்நாடகா மற்றும் தமிழகத்தில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்.கடந்த, 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட, வரும் தேர்தலில்  அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

'யாராலும் வெல்ல முடியாத பாஜக என்ற முழக்கத்துடன் களமிறங்குவோம்.கடந்த நான்கரை ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அரசின் சிறந்த நிர்வாகம் குறித்தும் மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும்.

இந்தியாவை ஒருமைப்படுத்தும் பணியில், பாஜக ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொய் பிரசாரங்களுக்கு, தகுந்த புள்ளி விபரங்கள், ஆதாரங்களுடன் சரியான பதிலை அளிக்க வேண்டும்.

கடந்த, நான்கு ஆண்டுகளில், பாஜகவிடம் தோல்வி அடைந்த கட்சிகள் இணைந்து, மிகப் பெரிய கூட்டணியை அமைப்பதாகக் கூறியுள்ளன. இது ஒரு கண்துடைப்பு நாடகமே. இந்த நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா பேசியதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #bjp leader amit shaa #pm modi #2019 lokpal election #bjp in tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story