சபாநாயகரிடம் கூடுதல் ஆவணங்களை கொடுத்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி! அந்த 6 பேர் ஆட்டம் முடிந்ததா... எடப்பாடியின் அடுத்த மூவ்..!!!
அதிமுகவைச் சேர்ந்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனு தொடர்பாக, கூடுதல் ஆவணங்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்துள்ளார்.
ராஜினாமா செய்த அதிமுகவைச் சேர்ந்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனு தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார். கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி அளிக்கப்பட்ட மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
6 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக மனு
மரகரம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் ஏற்கெனவே சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. சட்டமன்றத்தில் கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்பட்டதாக அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்..! இருகரம் கூப்பி வரவேற்போம்... சற்றுமுன் அரசியலில் புதிய பரபரப்பு..!!!
இந்த மனு மீது முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே 6 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், தகுதி நீக்க மனு மீதும் விசாரணை நடத்தி உரிய முடிவு எடுக்க வேண்டும் என்பதில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த உத்தரவை உறுதி செய்தது. அதே நேரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் குறித்து இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
கூடுதல் ஆவணங்களை வழங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சபாநாயகர் தரப்பில் கோரப்பட்ட விளக்கங்கள், அதிமுகவின் உட்கட்சி விதிகள் மற்றும் கூடுதல் சான்றுகள் அடங்கிய ஆவணங்களை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரில் வழங்கியுள்ளார். இந்த ஆவணங்கள் தகுதி நீக்க மனு மீதான விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தகுதி நீக்க மனு மீதும் தனியாக முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
இதையும் படிங்க: ராமதாஸின் மகள் காந்திமதி எடுத்த அதிரடி முடிவு..! பின்னணியில் தனுஷ்... தலைகீழாக மாறும் அரசியல் களம்.!!!