அடுத்தடுத்து அதிமுகவில் நடக்கும் அதிர்ச்சி.... ஒரே கடிதத்தால் மொத்தமாக மாறிய அரசியல் கணக்கு! செம ஷாக்கில் எடப்பாடி!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்காதது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடைபெற்ற நாமக்கல் மாவட்டக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்காதது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
தங்கமணி வராததால் பரபரப்பு
ஆனால், நாமக்கல் மாவட்டத்தின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கட்சி வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. அண்மையில் மூத்த நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றப்பட்டபோது, தங்கமணி மற்றும் வேலுமணி உள்ளிட்டோர் புதிய பொறுப்புகளை ஏற்க விருப்பமில்லை என்று தெரிவித்து, தங்களை அடிமட்டத் தொண்டர்களாகவே தொடர அனுமதிக்குமாறு கட்சித் தலைமையிடம் கடிதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உட்கட்சி நிலை குறித்து கேள்வி
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சில முன்னணி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு சென்ற நிலையில், தற்போது அதிமுக மூத்த தலைவர்களிடையே நீடிக்கும் கருத்து வேறுபாடுகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய சூழலில், இந்த நிகழ்வு உட்கட்சி நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் அரசியல் தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் எப்படி அமையும் என்பதைக் கட்சி நிர்வாகிகளும் அரசியல் பார்வையாளர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியே போன அதிமுக நிலைமை தான் என்ன? எடப்பாடிக்கு அடுத்த ஷாக்.... அதிருப்தியால் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றம்!!!