திடீர் திருப்பம்.... இனி தவெக கட்சிக்கு ஆதரவு இல்லை! அதிருப்தியால் மீண்டும் திரும்ப அலோசனை...!!!
புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த சில அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ் அணிக்கு திரும்ப முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளன. புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகும் சூழலில், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் விஜய் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெளிவான பிறகே இந்த மாற்றம் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து மூன்று முக்கிய எம்.எல்.ஏ.க்கள் விலகல்..? 35 எம்எல்ஏக்களுடன் முக்கிய கட்சியில் இணைவு...செம ஷாக்கில் எடப்பாடி!!!
இபிஎஸ் அணிக்கு திரும்பும் ஆலோசனை
தகவலின்படி, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ கே.பி. அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்எல்ஏ மரகதம் வெற்றிவேல் ஆகியோர் முக்கியமாக பேசப்பட்டு வருகின்றனர்.
இருவரும் கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அரசியல் சூழல் குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை வாய்ப்பு இல்லாததால் அதிருப்தி?
புதிய அமைச்சரவையில் அதிகாரப்பூர்வ பொறுப்புகள் கிடைக்காத நிலை உருவானதோடு, தங்களது தொகுதிகளில் கட்சித் தொண்டர்களிடமும் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கணிப்பில், மீண்டும் பழைய அணிக்குத் திரும்பும் முயற்சி நடைபெறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், இந்த நகர்வு தொடர்பாக அதிமுக தலைமையிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், கட்சிக்குள் மீண்டும் புதிய மாற்றங்கள் உருவாகும் சூழல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!