×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவெக கட்சிக்கு போக வேணாம்.... சிக்கலில் நம்பலும் சிக்கிப்போம்! திடீரென ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.....யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!!!

இடைத்தேர்தல் தாமதம் மற்றும் தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களின் நிலை காரணமாக, மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாறும் முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவான புதிய சூழல் தொடர்ந்து பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ஆர்வம் காட்டியிருந்த சில எம்எல்ஏக்கள், தற்போதைய அரசியல் நிலவரத்தை கவனத்தில் கொண்டு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சி மாற்றத்தால் மாறிய அரசியல் சமநிலை

தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த TVK, ஆட்சி அமைக்க தேவையான ஆதரவை காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதன் மூலம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!

இதன் பின்னர் அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினைகள் தீவிரமடைந்தன. சில முக்கிய நிர்வாகிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இடைத்தேர்தல் தாமதம் ஏற்படுத்திய புதிய சிக்கல்

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் எதிர்பார்த்த இடைத்தேர்தல் தள்ளிப்போயுள்ளது. இதனால் அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் கட்சி மாற தயக்கம்?

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து விலகி வருபவர்களுக்கு மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கக்கூடாது என தவெகவின் சில நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இணைந்தவர்களுக்கு எம்எல்ஏ பதவியும் இல்லாமல், கட்சியிலும் முக்கிய பொறுப்பு கிடைக்காத சூழல் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், வீரமணி உள்ளிட்ட மேலும் சில அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள், தற்போதைக்கு தவெக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடராமல், தங்களது இணைவு முடிவை ஒத்திவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: அதிருப்தியிலேயே அதிமுக அல்லேலப்படுது.... தவெக விற்கு தாவிய கந்தர்வகோட்டை முன்னால் எம்.எல். ஏ...! அதிர்ச்சியில் எடப்பாடி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #அதிமுக #by election #விஜய் #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story