×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் போட்ட பிளான் மொத்தமும் நடக்குது.....விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு! அதிமுக வில் அடுத்தடுத்து 10 க்கு மேல்.....அதிர்ச்சியில் அல்லேலப்படும் எடப்பாடி!!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அதிகரிக்கும் நிலையில், அதிமுகவில் உட்கட்சி அதிருப்தி வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் விஜயை சந்திக்கத் திட்டம்.

Advertisement

2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பை நெருங்கியுள்ளது. காங்கிரஸ் ஆதரவு கிடைத்ததால் கட்சியின் பலம் 113 ஆக உயர்ந்த நிலையில், அதிமுகவுக்குள் புதிய அரசியல் குழப்பம் வெடித்துள்ளது.

அதிமுகவில் அதிருப்தி குரல்

பாஜக கூட்டணியால் பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்தது, கட்சிக்குள் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வெளிப்படையாகவே விஜய் தலைமையிலான தவெக-க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அடிமேல் அடிவாங்கும் எடப்பாடி! தவெகவில் இணையும் அதிமுக வின் முன்னாள் எம்பி....! தவெக அரசியலில் பரபரப்பு!

அவருடன் எஸ்.பி. வேலுமணியும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சண்முகத்தின் தலைமையில் விஜயை நேரில் சந்திக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜயபாஸ்கர் நகர்வு பரபரப்பு

எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய ஆதரவாளராக பார்க்கப்பட்ட புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கரும் தற்போது அதிருப்தி அணிக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களுடன் அவர் விரைவில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுக தலைமையிலேயே புதிய சவால் உருவாகியுள்ளது. கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கூட்டணி கணக்கு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க தவெக-க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மத்தியில் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில், பாமக, விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடனும் தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதையடுத்து, விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை அமைவது உறுதியாகும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

 

இதையும் படிங்க: செங்கோட்டையனின் அடுத்த அதிரடி சம்பவம்! தவெக விஜய்யுடன் இணையும் அதிமுக அமைச்சர்? அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Vijay #AIADMK Crisis #Tamil Nadu Politics #Edappadi Palaniswami #Congress Support
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story