×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுக பதவிக்கு சொத்தை வித்து ரூ.10 கோடி கொண்டு வா... தேர்தல் மோசடி புகாரில் சிக்கிய சி.விஜயபாஸ்கர்? அடுத்த பரபரப்பு..!!!

சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வழங்குவதாகக் கூறி தலா ரூ.10 கோடி வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

Advertisement

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகக் கூறி தலா ரூ.10 கோடி வரை பணம் வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக நிர்வாகிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை நிர்வாகியின் பகிரங்க குற்றச்சாட்டு

புதுக்கோட்டை அதிமுக மாவட்டச் செயலாளர் பழனிவேல், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, தனது சொத்துகளை விற்றுப் பணம் கொண்டு வருமாறு சி.விஜயபாஸ்கர் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த நிபந்தனையை ஏற்குமாறு வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CM விஜய்கு வந்த அடுத்த தலைவலி! பதவி வேணும்னா ரூ.5 லட்சம் கொடு.... N.ஆனந்த் விவகாரத்தை தொடர்ந்து அடுத்த பரபரப்பு....!!!

ஆலங்குடி நிர்வாகியும் புகார்

இதுபோல ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த விமல் என்பவரும், தேர்தல் சீட் வழங்குவதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

இதற்கிடையில், சி.விஜயபாஸ்கர் தற்போது அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ள சூழலில், அவர் மீதான இந்த பணமோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மேலும் கவனம் பெற்றுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு சி.விஜயபாஸ்கர் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: "ரூ.5 லட்சம் கொடு.. இல்லைனா பதவியே கிடையாது".. . N.ஆனந்த் விவகாரத்தில் பரபரப்பு. விஜய்க்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#C Vijayabaskar #அதிமுக #தமிழக வெற்றி கழகம் #Election Ticket #pudukottai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story