அதிமுக பொதுக்கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளு! இபிஎஸ் வந்ததும் மறுக்கப்பட்ட அனுமதி! சரமாரியாக மக்கள் சரிந்த காட்சி!
சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவர் நியமனம், நுழைவாயிலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்னை அரசியல் வட்டாரத்தில் இன்று கவனம் பெற்ற நிகழ்வாக, வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அமைந்தது. கட்சியின் முக்கிய முடிவுகள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் கூட்டத்திற்கு முன் ஏற்பட்ட பரபரப்பு ஆகியவை தொண்டர்களிடையே பேசுபொருளாக மாறின.
பொதுக்குழு கூட்டத்தில் பெரும் பங்கேற்பு
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முக்கிய விவாதங்களுக்கு மேடையாக அமைந்தது.
அவைத்தலைவர் மாற்றம் அறிவிப்பு
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில், தற்காலிக அவைத்தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நியமிக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். அவரின் தலைமையிலேயே பொதுக்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நுழைவாயிலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு
இந்நிலையில், கூட்டம் தொடங்கும் முன்பாக மண்டபத்தின் நுழைவாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வேனில் உள்ளே நுழைந்த அதே நேரத்தில், அதிமுக தொண்டர்கள் கூட்டமாக உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் தடுமாறி விழுந்து பின்னர் எழுந்து சென்ற சம்பவம் அங்கு பதற்றத்தை உருவாக்கியது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் சில நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்று நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது நிகழ்வுகளால் கூட வானகரம் பரபரப்பு என்ற பெயரை பெற்றது.
இதையும் படிங்க: தாயின் மரண வேதனை! வாய் பேச முடியாது! காது கேட்காது! கரூர் பிரச்சாரத்தில் பச்சிளம் குழந்தையை இழந்து பரிதவிக்கும் தாய்! மனதை உலுக்கும் வீடியோ.....