நள்ளிரவில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை.... 5 இல் 1 பங்கு ரகசியம்! எடப்பாடி பதவியை பறிக்க விஜயபாஸ்கரின் மாஸ்டர் மூவ்.! அடுத்தடுத்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் கூட....!!!
அதிமுகவில் இபிஎஸ் தலைமையை எதிர்த்து வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் அணியினர் பொதுக்குழுவை கூட்டும் முயற்சியில் தீவிரம் காட்டியதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் அதிமுகவைச் சுற்றி புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே சவாலுக்கு உட்படுத்தும் வகையில் கட்சிக்குள் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அதிருப்தி அணியினர், அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அழியப்போகும் அதிமுக கட்சி...? எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்! சிவி சண்முகம் செய்யும் தில்லாங்கடி வேலையால்.... தலையை ஆட்டும் அமைச்சர்கள்!
“போதிய ஆதரவு எங்களிடம் உள்ளது”
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கட்சியின் அடிப்படை விதிகளின்படி பொதுக்குழுவைக் கூட்ட தேவையான உறுப்பினர்களின் ஆதரவு தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவைக் கூட்டுவது கட்டாயம் எனவும், தற்போது அதைவிட அதிகமான ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவற்றை விரைவில் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்து பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
அதிருப்தி அணியினர் தரப்பில், கடந்த சில தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததற்கு இபிஎஸ்-ன் ஒருதலைப்பட்ச முடிவுகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தாமல் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட பழைய தலைவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை மீண்டும் பலப்படுத்த முடியும் என்பதையும் இந்த அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்ட, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள தயாராகும் இபிஎஸ் தரப்பு
மறுபுறம், தலைமை நிலைய நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இன்னும் தங்களுடன் இருப்பதாக நம்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுக்குழு உறுப்பினர்களை தக்கவைக்கும் பணியிலும் இபிஎஸ் அணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக வரலாற்றில் பொதுக்குழுக்கள் பலமுறை முக்கிய திருப்புமுனைகளை உருவாக்கியுள்ள சூழலில், தற்போது உருவாகியுள்ள இந்த புதிய உட்கட்சி மோதல் கட்சியின் எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி அடுத்த 15 நாட்களில் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!