×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுகவின் களைகளை எடுத்துவிடும், இனி வளர்ச்சி தான் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.!

அதிமுகவின் களைகளை எடுத்துவிடும், இனி வளர்ச்சி தான் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.!

Advertisement

 

நமது ஆட்சியில் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல நலத்திட்டங்கள் செய்து வழங்கினோம், திமுக அரசு வந்ததும் மின்வெட்டும் சேர்ந்து வந்துவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்தோரிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சிக்காலத்தில் டெல்டா விவசாயிகள் பாதிக்கக்கூடாது என 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இன்று திமுக அரசு நேரக்கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. ஆனால், மின்தட்டுப்பாடு இல்லை என்று கூறுகிறார்கள். தட்டுப்பாடு இல்லை என்றால் எதற்கு நேர கட்டுப்பாடு?. 

திமுக வந்தாலே மின்தடை வந்துவிடும். அதிமுக விவசாயிகளுக்காக பாடுபடும் இயக்கம். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலும் சரி, இப்போதும் சரி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது அதிமுக மட்டுமே. 

நெற்பயிர்கள் என்றால் சிறந்த விளைச்சல் வரும். விளைச்சலை செழிப்பாக்க களைகள் எடுப்பார்கள். அதிமுகவில் இருந்த களை எடுக்கப்பட்டது. இனி அதிமுக என்ற பயிர் தொடர்ந்து செழித்து வளரும். அரசியலில் சிலர் சொந்த நலனுக்கு இருக்கிறார்கள். 

இங்கு கூடியுள்ள நாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பணிகளை தொடர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையோடு இருக்கிறோம். என்னை நான் தொண்டன் என்றே கூறுகிறேன். இங்கு தனிமனித ஆதிக்கம் இல்லை. தொண்டரோடு தொண்டராக உங்களின் ஆதரவுடன் இங்கு வந்துள்ளேன். 

நமது இயக்கத்தில் இலட்சம் பழனிச்சாமி உள்ளார்கள். எவனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை எவராலும் உரிமை கொண்டாட முடியாது. இது தொண்டரால் ஆளக்கூடிய இயக்கம். தொண்டருகே முக்கியத்துவம் வழங்கப்படும்" என கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #edappadi palanisamy #politics #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story