×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எடப்பாடியின் திடீர் திருப்பம்... அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!!!

அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பட்டியல் இன்று முதல் அமலுக்கு வந்தது.

Advertisement

அதிமுகவில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில், தலைமை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பொதுச் செயலாளர்களாக நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி

புதிய பட்டியலின்படி, முன்னாள் அமைச்சர்களான நத்தம் இரா. விசுவநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் வரகூர் அ. அருணாசலம் கழக தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: அதிமுக தலைமையில் அதிர்ச்சி.... எஸ்.பி.வேலுமணி, சி. வி.சண்முகம் உட்பட6 MLA-க்கள் திடீர் மாயம்..? அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!

அமைப்புச் செயலாளர்களாக மூத்த தலைவர்களுக்கு பொறுப்பு

கட்சியின் முக்கிய பிரிவான அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, கே.சி. கருப்பணன், எஸ்.பி. சண்முகநாதன், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், கே.சி. வீரமணி மற்றும் பி. பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்கை பரப்பு மற்றும் இளைஞர் அணியிலும் புதிய நியமனங்கள்

இதையடுத்து, கழகக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் டாக்டர் எம். மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக முன்னாள் எம்.பி. எஸ்.ஆர். விஜயகுமார் பொறுப்பேற்றுள்ளார். கட்சியின் பல்வேறு பிரிவுகளில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த மூத்த நிர்வாகிகளுக்கு இந்த நியமனங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து புதிய பொறுப்புகளும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: இவுங்கள வச்சுக்கிட்டு இனி வேலைக்கு ஆகாது... ஸ்டாலின் கையில் அந்த ரகசிய அறிக்கை! தூக்கத்தை துளைத்த சீனியர்கள்....நாளை நடக்கப்போகும் மெகா சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #எடப்பாடி பழனிசாமி #eps #அதிமுக நிர்வாகிகள் #Party Appointments
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story