×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: இன்ப அதிர்ச்சியில் எடப்பாடி! செம ஷாக்கில் தமிழக அரசியல் புள்ளிகள்... வேகமெடுக்கும் அதிமுக அரசியல் களம்!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. இபிஎஸ் பெயரில் 349 மனுக்கள் வழங்கப்பட்டதால் அரசியல் களத்தில் புதிய பேசுபொருள்.

Advertisement

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அதிமுக தனது தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திய இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக, இந்த முறை எந்தவிதமான சலனத்திற்கும் இடமளிக்காமல் களத்தில் இறங்க தயாராகி வருகிறது. கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தொடர்ந்து நீக்கி வரும் இபிஎஸ், தற்போது தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

விருப்ப மனுக்களுக்காக குவிந்த நிர்வாகிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று ஏராளமான நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். முதல் நாளிலேயே 1237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: செம குஷியில் விஜய்! செங்கோட்டையனின் தரமான சம்பவம்.... . விஜய் கட்சியில் கூண்டோடு மாபெரும் இணைவு!

இபிஎஸ் பெயரில் 349 மனுக்கள்

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, 349 மனுக்கள் இபிஎஸ் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழங்கப்பட்டுள்ளன. இது அவருக்கு அரசியல் ரீதியாக ‘இன்ப அதிர்ச்சி’யை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உட்கட்சி பூசல் நிலவி வருவதாக பேசப்பட்டு வரும் சூழலில், இபிஎஸுக்கு கிடைத்த இந்த வரவேற்பு அதிமுக அரசியல் களத்தில் மீண்டும் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. வரும் நாட்களில் இது தேர்தல் அரசியலில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: இன்னும் சற்று நேரத்தில்.... தவெக கட்சியில் இணையும் முக்கிய புள்ளி! நொடிக்கு நொடி பரபரப்பு! அனல் பறக்கும் விஜய் அரசியல்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK 2026 Election #EPS Edappadi Palaniswami #Tamil Nadu Politics #அதிமுக தேர்தல் #BJP Alliance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story