சிக்கியது 10 ரகசிய பைல்ஸ்..! தவெக தலைமைக்கு அதிமுக விடுத்த பகிரங்க எச்சரிக்கை..! அடுத்த டென்ஷனில் CM விஜய்..!!!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக 10 கோப்புகள் தயாராக உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தவெக எம்.எல்.ஏ.க்கள் செய்யும் தவறுகளை கட்சித் தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதாக அதிமுக தரப்பைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற அணுகுமுறையே மாநிலத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்களில் அடுத்தடுத்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கல்யாண சுந்தரம், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கின் முடிவு தவெக தரப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... அதிமுகவில் இணைந்த என்கவுண்டர் வெள்ளத்துரை..! அதிரடியில் அரசியல் களம்...!!!
தவெக நிர்வாகிகள் மீது 10 கோப்புகள் தயாராக உள்ளதாக தகவல்
இந்த நடவடிக்கை ஒரு தொடக்கம் மட்டுமே எனக் கூறிய கல்யாண சுந்தரம், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பல்வேறு சட்டவிரோத செயல்கள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 10 புதிய கோப்புகள் அதிமுக வழக்கறிஞர்கள் வசம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்தடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
தயாராக உள்ள ஆவணங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அடுத்தடுத்து சட்டரீதியான வழக்குகள் தொடரப்படும் என்றும் கல்யாண சுந்தரம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: அடியோடு சரியும் அதிமுக... தவெக-வில் இணைய உள்ள முக்கிய புள்ளி...! அதிர்ச்சியில் எடப்பாடி...!!!