×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திடீர் மரணம்.! எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!!

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திடீர் மரணம்.! எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!!

Advertisement

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், ஆர்.கே.நகர் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். அண்ணாமலை உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும், தொடர்ந்து மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அண்ணாமலை, ஆர்.கே. நகர் பகுதிக் கழகச் செயலாளர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். 

அன்புச் சகோதரர் அண்ணாமலையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று அதில் தெரிவித்திருந்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk #eps #tamilnadu politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story