இரும்பு கோட்டையை ஒருபோதும் அசைக்க முடியாது! எல்லாம் முடிஞ்சிட்டு..... தாயும் பிள்ளையும் போல் இருக்கிறோம்! இபிஎஸ் - சி.வி சண்முகம் உறவை உறுதிப்படுத்திய கேசி. வீரமணி.!!!
அதிமுகவில் நீண்ட நாட்களாக நீடித்த உள்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இபிஎஸ் மற்றும் சி.வி.சண்முகம் அணிகள் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட பிரிவு அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இபிஎஸ் தலைமையிலான அணியும், சி.வி சண்முகம் - எஸ்.பி வேலுமணி அணியும் தனித்தனியாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் அதிமுக ஒன்றுபடும் சூழல் உருவாகியுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பிறகு தீவிரமான உட்கட்சி மோதல்
சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதையடுத்து கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்தது. இதையடுத்து சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஒரு அணி உருவாகிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு அணி செயல்பட்டது.
அரசியல் நிலைமைகள் மாறியபோது, சி.வி சண்முகம் தரப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக சார்பினருக்கு வாய்ப்பு வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
ராஜினாமா, அணிமாற்றம் என பரபரப்பு
இந்த சூழலில், சி.வி சண்முகம் தரப்பை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனால் கட்சிக்குள் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
அதே நேரத்தில், சி.வி சண்முகம் தரப்பும் இபிஎஸ் அணியுடனும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை சாதகமாக முடிந்துள்ளதாகவும், விரைவில் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தாய் பிள்ளைகள் போல ஒன்றாக இருக்கிறோம்’
இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், அதிமுக ஐடி விங் சார்பில் “இரும்புக் கோட்டையை அசைக்க முடியாது” என சமூக வலைதளத்தில் பதிவு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, எஸ்.பி வேலுமணியை சந்திக்க வந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மூத்த தலைவர் கே.சி வீரமணி, “எல்லாம் முடிந்துவிட்டது. தாய் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதன் மூலம் அதிமுகவில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிளவு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: இனி வேற வழியில்லை... எடப்பாடி காலில் விழவேண்டிய நிலைதானா? இன்று நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை.... அடுத்தக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.!!!