×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவதூறு கருத்துக்களை பரப்பிய ஸ்டாலினுக்கு வக்கீல் நோட்டீஸ்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் எடுத்த அதிரடி முடிவு.. 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு! இல்லாவிட்டால் சிறை தண்டனையா?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் அவதூறானவை என குற்றம்சாட்டி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட கருத்துகளை மையமாகக் கொண்டு புதிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவுகளில் அவதூறான தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, அமைச்சர் தரப்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எக்ஸ் பதிவுகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான் பிரிட்டோவுக்கும், அமைச்சரின் உறவினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட கருத்துகளை 48 மணி நேரத்திற்குள் திரும்பப் பெற்று, அனைத்து ஊடகங்களிலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சவாலுக்கு பதிலடி சவால் தான்.... இது மட்டும் நடந்தால் எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்ள ரெடி...! விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட ஆர்.எஸ் பாரதி..!!!

நீதிமன்ற நடவடிக்கைக்கு எச்சரிக்கை

குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்கம் அளிக்கவோ அல்லது கருத்துகளை வாபஸ் பெறவோ தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கோரி சிவில் வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டு

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர், பொதுவாழ்க்கையில் உள்ளவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த விவகாரத்துக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ள இந்த விவகாரம், சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: # சற்று முன்: எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை...! தவெகவில் அவர் உறுப்பினராக கூட இல்லை! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Adhav Arjuna #மு.க.ஸ்டாலின் #Legal notice #அவதூறு வழக்கு #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story