தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2026 சட்டமன்ற தேர்தல்... "முதல்வரை தீர்மானிக்கும் விஜய்..." அரசியல் விமர்சகர்கள் பரபரப்பு கனிப்பு.!!

2026 சட்டமன்ற தேர்தல்... முதல்வரை தீர்மானிக்கும் விஜய்... அரசியல் விமர்சகர்கள் பரபரப்பு கனிப்பு.!!

actor-turned-politician-vijay-may-decide-cm-political-e Advertisement

2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தேர்தல் வருவதற்கு இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி மற்றும் ஆட்சி பற்றிய பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் 2026 ஆம் வருட தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வரும் நடிகர் விஜய் கடந்த வருடம் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். தமிழகத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்த அவர் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை அறிவித்தாலும் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் தான் தங்களது கட்சியின் இலக்கு எனவும் தெரிவித்திருந்தார். விஜய் அரசியலுக்கு வந்ததால் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் ஆதரவு அவருக்கு அதிகமாக இருந்து வருகிறது.

tamilnadu

தமிழகத்தில் அமையும் பலமான கூட்டணி

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பலமான கூட்டணியை அமைத்திருக்கிறது. திமுக தங்களது நடப்பு கூட்டணியிலேயே தொடர்ந்தாலும் அவற்றின் பலம் அதிகரித்திருக்கிறது. மேலும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தங்களது பலத்தை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு இருப்பதால் அவரது கட்சியும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க: "டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; ஆட்சில பங்கு கிடையாது.." இபிஎஸ் கருத்தால் புதிய சர்ச்சை.!!

ஆட்சியை தீர்மானிக்க போகும் விஜய்

தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிகழும் என கனித்துள்ள அரசியல் விமர்சகர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் என கனித்துள்ளனர். மேலும் பலமான போட்டி நிகழ்வதால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு விஜய்யின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகும் எனவும் கணித்துள்ளனர். அப்போது விஜய் கேட்கும் டிமாண்ட் மிகப்பெரியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "அண்ணாமலை பாஜகவின் சொத்து; அரசியல் கூட்டணி நாகரீகமாக இருக்க வேண்டும்..." திமுக கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #TN politics #dmk #TVK #vijay #CM 2026
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story